Friday, 2025-07-18, 2:46:39 AM
Welcome Guest | RSS
வன்னி இணையம்
Main
Registration
Login
சேவைகள்

Our poll
Rate my site
Total of answers: 10

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.. 1..... நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. 2 .....ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க? 3...... அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா? 4...... ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க? 5...... மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா? 6..... ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன? 7...... Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்? 8....... அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி? 9..... நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா? 10...... "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. 11...... நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா? நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.
Login form

Search

Calendar
«  July 2025  »
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Entries archive

Site friends
  • Create your own site


  • Copyright MyCorp © 2025